நொச்சி இலை | பயன்களும் உபயோகிக்கும் முறைகளும்

அல்ஃபாதமிழன்
0

(toc)

நொச்சி இலை :

நொச்சி ஒரு அற்புதமான மூலிகைகளில் ஒன்றாகும். இந்த நொச்சி வெண்ணொச்சி, கருநொச்சி, நீலநொச்சி, நீர்நொச்சி, மயிலடி நொச்சி ஆகிய வகைகள் உள்ளன. வெண்ணொச்சி வெள்ளை நிறக் கிளைகளுடன் காணப்படும்.

இது மரமாக ஆற்றோரங்களில் சுமார் 30 அடி உயரம் வளரக்கூடியது. குறிப்பாக அனைத்து நொச்சியும் ஒரே மருத்துவ குணம் கொண்டவை தான்.

அதில் சிறப்பானது கருநொச்சி. கீல் வாதம், முக வாதம் போன்ற கடுமையான வாத நோய்கள் மண்டைக் குடைச்சல் முதலியவற்றிற்குச் செய்யப்பபடும் மருந்துகளில் கருநொச்சி சிறப்பாகச் சேர்க்கப்படுகின்றது.

செடியாகவும், மரமாகவும் வளரக்கூடிய நொச்சி கூட்டிலை வகையை சேர்ந்தது.

பயன்கள் :

இந்த இலைகளை தானியங்களை சேமிக்கும் பாத்திரத்தில் போட்டு வைத்தால் பூச்சிகள் பிடிக்காது. கிராமங்களில் கொசுவிரட்டியாகவும் இந்த இலையை பயன்படுத்துகின்றனர்.

நொச்சி இலைகள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டவை அவை :

வீக்கத்தைக் குறைக்கிறது

கீல்வாதத்தை குணப்படுத்துகிறது

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

மன அழுத்தத்தைக் குறைக்கிறது

மாதவிடாய் வலியைக் குறைக்கிறது

கர்ப்பப்பை நீர்க்கட்டிகளை குணப்படுத்துகிறது

மலச்சிக்கலைப் போக்குகிறது

நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது

தோல் நோய்களை குணப்படுத்துகிறது

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

இப்படி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள இந்த நொச்சி இலைகள் பொதுவாக உபயோகத்திற்கு பாதுகாப்பானது என்றாலும், சிலருக்கு ஒரு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். நொச்சி இலைகளை எடுத்துக்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரிடம் பேசுவது நல்லது.

நொச்சி இலைகளால் ஏற்படும் பக்க விளைவுகள் :

வயிற்றுப்போக்கு

வாந்தி

குமட்டல்

தலைவலி

தோல் அரிப்பு

சில மருந்துகளுடன் எதிர்வினை

உபயோகிக்கும் முறைகள்:

ஒரு தேக்கரண்டி நொச்சி இலை சாற்றில் 1 கிராம் மிளகுத் தூள் சிறிதளவு, நெய் சேர்த்து, காலை மாலை வேளைகளில் சாப்பிட மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும்.

நொச்சி இலைகளை தலையணையாகச் செய்து உபயோகிக்க, காய்ச்சல், தலைவலி, பீனிசம் ஆகியவை குணமாகும்.

ஒரு பிடி நொச்சி இலைகளை 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து வேது பிடிக்க மண்டை நீரேற்றம் கட்டுப்படும்.

கால் வீக்கத்தை குறைக்க கரு நொச்சி இலைகளை அரைத்து பற்றுப் போட்டு வந்தால் உடனடியாக மாற்றம் தெரியும்.

ஆலோசனை :

நீங்கள் வேறு ஏதேனும் மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால் நொச்சி இலைகளை எடுத்துக்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரிடம் பேசுவது நல்லது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

தவறுகள் இருப்பின் அவற்றை சுட்டிக்காட்டுக. மேலும் உங்கள் கருத்துக்களையும் பதிவிடவும்.

கருத்துரையிடுக (0)