நரம்பு இழுத்தல் Muscle cramp - காரணம் என்ன? தீர்வு என்ன?

அல்ஃபாதமிழன்
1

 
Muscle Cramp

(toc)

நரம்பு இழுத்தல் Muscle cramp அல்லது நரம்பு பிடிப்பு என்றால் என்ன?

நரம்பு இழுத்தல் Muscle Cramp - வயதானவர்கள் முதல் சிறுவர்கள் வரை பலருக்கும் சில வேளைகளில் கால் அல்லது கை அப்படியே இழுத்துக்கொள்ளும். காலை அல்லது கையை மடக்கவோ நீட்டவோ முடியாது. 

சிலருக்கு இருசக்கர வாகனத்தில் காலை தொங்கவிட்ட நிலையில் பிடித்துக்கொள்ளும். சிலருக்கு இரவில் உரக்கத்தில் இதுபோல இழுத்துக்கொள்ளும். 

இரவு நேரங்களில் காலில் குளிர்ச்சி ஏற்பட்டால் உடனே காலை இழுத்துக்கொள்ளும். இது பொதுவாக நரம்பு இழுத்தல் அல்லது பிடிப்பு என்று அறியப்படுகின்றது.

நரம்பு இழுத்தலுக்கான காரணம் என்ன?

Calcium Food

கால்சியம் சத்துக்குறைபாடே இது போன்ற நரம்பு இழுத்துக்கொள்ள காரணமாகும். மற்ற தாதுக்களுடன் ஒப்பிடும்போது கால்சியம் நம் உடலில் மிக அதிகமாகக் காணப்படும் கனிமமாகும். 

பொதுவாக மனிதர்கள் செயல்பட உடலுக்கு எரிசக்தி அவசியம். அந்த சக்தியை வழங்குவது இந்த கால்சியம் தான். இந்த கால்சியம் உடம்பில் குறைவு ஏற்பட்டால் இந்த பிரச்சினை ஏற்படும்.

தெளிவாக சொல்ல வேண்டுமானல் எரிசக்தி குறைவாக இருப்பதால் செயல்பாடு பாதிக்கும் அதனால் நமது தசைகள் இறுக்கம் அடையும், இதுவே நரம்பு இழுப்புக்கு காரணம்.

நரம்பு இழுப்புக்கு (Muscle cramp) நிரந்தரத் தீர்வு என்ன?

Calcium food

நரம்பு இழுப்பு (Muscle cramp) பிரச்சினை உள்ளவர்கள் வீட்டில் உள்ள அன்றாட பயன்பாட்டில் உள்ள உணவுப் பொருட்களை சரிவர எடுத்துக்கொள்வதின் மூலம் சரி செய்யலாம்.

கால்சியம் அதிகமாக உள்ள உணவு ஆதாரங்கள் சீஸ், பால், தயிர், நெய், அனைத்து பச்சை இலை காய்கறிகள், கீரை வகை(களில் அதிக கால்சியம் சத்து உள்ளது), சோயா பால், வேகவைத்த பீன்ஸ், ப்ரோக்கோலி, வெங்காயம், முட்டைக்கோஸ், முளைகள், நெல்லிக்காய், ஆரஞ்சு, முட்டையின் மஞ்சள் கரு, உலர்ந்த மீன், ஆட்டுக்கால் சூப், நிலக்கடலை, வெற்றிலை சுண்ணாம்பு.

மேலே குறிப்பிட்டுள்ள இது போன்ற உணவு வகைகளை அன்றாடம் நம் உணவில் சேர்த்துக்கொண்டால் நம் உடலுக்கு தேவையான கால்சியத்தை பெற முடியும். 

அவ்வாறு கால்சியம் சத்து நம் உடலுக்கு போதிய அளவு கிடைத்து விட்டாலே இந்த நரம்பு இழுப்பு (Muscle cramp) வாழ்க்கையில் என்றும் வராது.

இந்த நரம்பு இழுப்பு பிரச்சினை வரக்கூடியவர்கள், தங்கள் உடலை சூடான நிலையில் வைத்துக்கொள்வது அவசியம். 

நரம்பு இழுப்புக்கு உடனடித் தீர்வு

நரம்பு இழுப்பு (Muscle cramp) ஏற்பட்டுவிட்டால் உடனடியாக நாம் செய்ய வேண்டியது என்ன?

நம் உடலின் எந்தப் பகுதியில் நரம்பு இழுத்துக்கொள்கின்றதோ, அந்த இடத்தில் வெதுவெதுப்பான நீரில் துணியை முக்கி ஒத்தடம் கொடுத்தால் உடனே சரியாகும். 

வலி நிவாரணிகளை உபயோகப்படுத்தலாம். ஆன்லைனில் பல வலி நிவாரணிகள் கிடைக்கின்றன. 

அமேஷானில் Jiva Ayurveda 's Pain Calm Oil நல்ல வலி நிவாரணி ஆயில் கிடைக்கின்றது. இதனை உபயோகிப்பதும் உடனடி தீர்வாக அமையும். 

மேலும் இழுத்துக்கொண்ட பகுதியில் மசாஜ் செய்வதும் உடனடி தீர்வாக அமையும்.


உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் அவசியம் பதிவிடவும்

கருத்துரையிடுக

1கருத்துகள்

தவறுகள் இருப்பின் அவற்றை சுட்டிக்காட்டுக. மேலும் உங்கள் கருத்துக்களையும் பதிவிடவும்.

  1. நரம்பு இழுத்தல் இன்று பரவலாக பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரையில் ஏற்படுகின்றது. அதற்கு கால்சியம் பற்றாக்குறை தான் காரணம். இதை மக்கள் தெளிவாக உணர்ந்து. உணவை சரியாக எடுத்துக்கொள்வதே தீர்வு.

    பதிலளிநீக்கு
கருத்துரையிடுக